மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி:முதலிடத்தை பிடித்த தேனி அணி

Author: Udhayakumar Raman
18 October 2021, 1:28 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் தேனி அணி முதலிடத்தையும் திண்டுக்கல் மாவட்ட ஜிடிஎன் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும் பெற்றது.

திண்டுக்கல்லில் எஸ்.வி.ஆர். டிரஸ்ட் மூலம் நடத்தும் மாநில அளவிலான ஐவர் கால்பந்து இறுதி போட்டி இன்று நடைபெற்றது.திண்டுக்கல்லில் அடாத மழையிலும் விடாத போட்டியாக ஐவர் கால்பந்து போட்டி தொடர்ந்து நடந்து வந்தது. இதில் 21 அணிகள் பங்கேற்றன தேனி அனியும் திண்டுக்கல் அணியும் இறுதி போட்டிக்கு தேர்வாகின. இன்று நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி நிமிடம் வரை இரு அணிகளும் கோல் எதும் அடிக்காததால் டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது இதில் தேனி அணி மூன்று கோல்களும், திண்டுக்கல் அணி இரண்டு கோல்களும் அடித்தன. முதல் இடத்தை தேனி அணியும் இரண்டாம் இடத்தை திண்டுக்கல் மாவட்ட ஜிடிஎன் கல்லூரி அணியும் பெற்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு நினைவு சுழற்கோப்பையுடன் முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக வாங்கிய 7,500 ரூபாயும், மூன்றாம் பரிசாக 5,000 ரூபாயும் வழங்கப்பட்டது. இப்போட்டியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், ஜி டி என் கலை கல்லூரி தாளாளர் ரெத்தினம், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம், திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜா மைதீன், மாவட்ட விளையாட்டு அலுவலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

Views: - 128

0

0