மாநில அளவிலான கால்பந்து போட்டி: முதல் பரிசை வென்ற திண்டுக்கல் அணி

30 November 2020, 4:35 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் திண்டுக்கல் அணி முதல் பரிசை வென்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஐந்தாவது மாநில அளவிலான கால்பந்து திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது இதில் மொத்தம் 40 அணிகள் பங்கேற்றன. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் இருந்து மொத்தம் 40 க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இவ்விளையாட்டானது ஸ்ரீவில்லிபுத்தூர் சிஎம்எஸ் விளையாட்டு மைதானத்தில் வைத்து நாக்-அவுட் முறையில் கால்பந்து விளையாட்டானது நடைபெற்றது. இந்த விளையாட்டானது நேற்றும், இன்றும் நடைபெற்று வந்தது. இதில் இறுதிப் போட்டிக்கு திண்டுக்கல் அணியும், மதுரை அணியும் மோதின. இதில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.

முதல் பரிசு ரூபாய் 15 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பை தட்டிச்சென்றது. இரண்டாம் பரிசு மதுரை அணி ரூபாய் 8,000 மற்றும் சுழல் கோப்பை பெற்றது. இவ்விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்தையா மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் உதவி ஆய்வாளர் கருத்தப்பாண்டி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், ரொக்கப் பணத்தையும் வழங்கினர். இவ்விழாவினை ஸ்ரீவி கால்பந்து விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்தனர்.

Views: - 12

0

0