ஹெல்மெட் அணியாதவர்களுக்கு வினோத தண்டனை: நகரில் உள்ள சித்தேரி கரையில் நடைப்பெற்ற நிகழ்ச்சி
24 January 2021, 5:30 pmஅரியலூர் நகரில் உள்ள சித்தேரி கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட காவல்துறை மற்றும் சோலைவனம் அமைப்பினர் இணைந்து சித்தேரி கரையை தூய்மைபடுத்தி மரக்கன்றுகள் நட்டனர். இதில் மாவட்ட எஸ்பி ஶ்ரீனிவாசன் கலந்து கொண்டு முதற்கட்டமாக 100 மரக்கன்றுகளை ஏரியில் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அந்த வழியே சென்ற வாகன ஒட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் அந்த வழியே ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி நட செய்தார். மேலும் மரக்கன்றுகளை நடவு செய்தவர்களே அதனை பராமரிக்க வேண்டும் என வினோத தண்டனை வழங்கினார்.
மேலும் சாலை பாதுகாப்பு உறுதிமொழியும் ஏற்கபட்டது. இதில் அரியலூர் டிஎஸ்பி மதன், இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், டிராபிக் இன்ஸ்பெக்டர் மதிவாணன் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் மற்றும் சோலைவனம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
0
0