தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 8 மாதமே ஆன ஆண் புள்ளிமான் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த சோகம்

19 August 2020, 10:15 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 8 மாதமே ஆன ஆண் புள்ளி மானை தெருநாய்கள் கடித்ததில் காயமடைந்த புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது.

அருப்புக்கோட்டை ரெட்டியாபட்டி திருச்சுழி பந்தல்குடி திருச்சுழி, நரிக்குடி,பாளையம்பட்டி மற்றும் காரியாபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சமூக வனக் காடுகளில் மான்கள், முயல்கள், காட்டு பன்றி, கீரி போன்ற காட்டு விலங்குகள் அதிகளவு வாழ்ந்து வருகின்றன. போதிய மழை இல்லாததால் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வறண்டு காடுகளில் வாழும் விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் வருகின்றன. அவ்வாறு வரும் போது ஒரு சில சமயங்களில் நாய்கள் தாக்கியும், வாகனங்களில் அடிபடுவதும் அடிக்கடி நிகழ்கிறது.

இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டை அருகே T.மீனாட்சிபுரம் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 8 மாதமே ஆன ஆண்புள்ளி மானை தெருநாய்கள் துரத்தியது ஊருக்குள் அங்கும் இங்கும் ஓடிய புள்ளிமானை தெருநாய்கள் விடாமல் துரத்தி கடித்ததில் காயமடைந்த புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த புள்ளிமானின் உடல் கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனத்துறையினரால் காட்டுப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த எட்டு மாதமே ஆன புள்ளி மான் தெருநாய்கள் கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 29

0

0