அனைத்து தொழிற்சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்

25 September 2020, 4:06 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டத்தை கண்டித்தும், திரும்பபெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் பல்வேறு கட்சிகள், பொதுநல அமைப்புகள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்ட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியூ, ஐஎன்டியுசி உட்பட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சிஐடியூ மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வோளாண் சட்டம் விவசாயிகளை மொத்தமாக நிலத்தில் இருந்து வெளியேற்றி, விவசாயிகளுக்கு எந்த விதமான ஆதரவு விலை இல்லாமல் போக வழி வகை செய்கிறது. எனவே இச்சட்டத்தை மத்திய திரும்ப பெற வேண்டும் வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூண்ஸ் கட்சியின் நிர்வாகி ஸ்ரீதர், திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிடடி தலைவர் ஜவகர், இந்திய கம்யூஸ்ட் கட்சியின் நிர்வாகி சுரேஷ், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் உதுமான்அலி உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 10

0

0