உயர்த்தப்பட்ட மின்கட்டணம் திரும்ப பெற வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

4 September 2020, 7:49 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்

கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியை ஆளுக்கூடிய காங்கிரஸ் அரசு கடந்த ஜூன் மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மேலும் மின்கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு உடனே ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை அருகே கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அரசு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வைத்துள்ள நிலுவைத் தொகையினை வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

Views: - 0

0

0