மாணவ-மாணவிகள் இடையே தூக்குகயிறு விழிப்புணர்வு பிரச்சாரம்: பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா பேட்டி…

11 September 2020, 9:32 pm
Quick Share

கன்னியாகுமரி: நீட் தேர்வால் தமிழகத்தில் கடந்த 25 நாட்களில் 5 மாணவ மாணவிகள் இறந்துள்ளதாகவும், இதற்கு தற்கொலை தீர்வாகாது என்பதை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் இடையே தூக்குகயிறு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா கூறினார்.

மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கட்சிகள் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ” தமிழகத்தில் போக்சோவின் தாய் வீடு டாஸ்மாக்’. இந்த டாஸ்மாக் தான் அத்தனை அவலங்களுக்கும் காரணம். இதுவரை போக்சோ சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல்தான் வந்துள்ளதே தவிர தண்டனை பெற்றவர்களின் புள்ளிவிபரம் இதுவரை வெளியாகவில்லை.

நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் கடந்த 25 நாட்களில் 5 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எது நடந்தாலும் மத்திய அரசு கண்டு கொள்ளாது என்பதால் மாணவர்கள் மத்தியில் தூக்குக்கயிறு போராட்டம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் தற்கொலையை தடுக்க பெண் விடுதலை கட்சி போராட்டத்தில் இறங்கி உள்ளது. தமிழகத்தில் காசி போன்ற பல காசிகள் பெண்களை சூறையாடுவதை தடுக்க ‘ராமி, சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 7

0

0