பாலியல் வழக்கு: சிவசங்கர் பாபாவை கண்டித்து நீதிமன்றம் அருகே மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

17 June 2021, 8:29 pm
Quick Share

செங்கல்பட்டு: கேளம்பாக்கம் அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வரப்பட்ட சிவசங்கர் பாபாவை கண்டித்து நீதிமன்றம் அருகே மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள சுஷில்ஹரி இண்டர்நேஸ்னல் ரெசிடென்ஸி பள்ளியின் நிர்வாகி சிவசங்கர்பாபா, பாலியல் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்கில் ஆஜர் படுத்த அழைத்து வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சாமியார் என்ற பெயரில் அப்பாவி மாணவிகளை பாலியல் தொந்தரவு கொடுத்த சிவசங்கர் பாபாவுக்கு தூக்கு தண்டனை வழங்கவேண்டும் என முழக்கங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தை நோக்கி ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு கூடியிருந்த போலீசார் போராட்டதில் ஈடுபடவர்களை கைது செய்தனர். இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 65

0

0