புதுச்சேரியில் 8ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்: பள்ளி கல்வித்துறை இயக்குநர் பேட்டி

Author: Udayaraman
2 October 2020, 5:39 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 5ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் 8ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடா மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடா பேசுகையில்,” புதுச்சேரியில் வரும் 5ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 5,6 மற்றும் 7ஆம் தேதி மாணவர்கள் இருக்கை மற்றும் பள்ளிகளை தயார் படுத்த வேண்டும் என்றார். 8ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்த அவர்,

வாரத்தில் 6நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என்றும்
10,12வகுப்புகளுக்கு 3 நாட்களும், 9-11 வகுப்புகளுக்கு 3 நாட்கள் காலை 10 மணி முதல் 1மணி மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வரக்கூடிய மாணவர்களுக்கு வருகை பதிவேடு(Attendance) கிடையாது என்றும் பெற்றோர் சம்மதத்துடன் பள்ளிகளுக்கு மாணவர்கள் வர வேண்டும் என்று கூறினார். மேலும் கல்வித்துறை அதிகாரிகள் வகுப்புகள் நடைபெறும் போது ஆய்வு செய்வார்கள் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு தெரிவித்தார்.

Views: - 32

0

0