சிறுமியர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடிய மாணவிகள்

14 January 2021, 3:04 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள சிறுமியர் இல்லத்தில் பொங்கல் விழாவில் கும்மியடித்து பள்ளி மாணவிகள் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

தமிழர் பண்டிகையாம் பொங்கல் விழா இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவாரூரில் உள்ள புனித பாத்திமா அரசு உதவி பெறும் பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியில் படிக்கும் ஆதரவற்ற சிறுமிகள் தங்கும் இல்லத்தில் பொங்கல் பானை வைக்கப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் பொங்கி வரும்போது பள்ளி மாணவிகள் கும்மியடித்து பொங்கலை வரவேற்கும் விதமாக பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Views: - 7

0

0