மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் ஆய்வுக் கூட்டம்..!!
24 February 2021, 5:57 pmகோவை: காரமடையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் காரமடையில் பாரதிய ஜனதா கட்சியின் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. காரமடை மத்திய மண்டல தலைவர் கே.ஆர்.விக்னேஷ் வரவேற்றார். கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.பி ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஏ.பி. முருகானந்தம் சிறப்புரையாற்றினார். தமிழக துணை தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ், முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய செயலாளர், தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி கலந்து கூட்டத்தில் கண்டு பேசுகையில், தமிழகத்திற்கான சரியான நேரம் இது, அலட்சியம் காட்டாமல் நிச்சயமாக நாம் ஜெயிக்க வேண்டும். யுத்தகளத்தில் மூன்று விதமான படைகள் உள்ளது. ஆகாயப்படை, கப்பல் படை, தரைப் படை ஆகும். மூன்றாவதானா தரைப்படை சாதாரணமானதாக இல்லை, அது பூத் கமிட்டி தான் இதன் மூலம் மக்கள் மனதை மாற்றி வாக்குகளை பெற வேண்டும்.
தமிழகத்தில் மொழி வாரியாக பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. அதனை சரிசெய்ய தேசிய கட்சியான பாஜகவாள் மட்டும்தான் முடியும். தமிழகத்தில் உள்ள தீவிரவாதத்தை ஒழிக்க பாஜக கட்சியால் மட்டுமே முடியும். தமிழகத்திற்கு இதுதான் சரியான நேரம் இந்த தேர்தல் யார் நண்பன் ? யார் விரோதி ? கடந்த ஆறு வருடத்தில் மோடியின் சேவை மகத்தானது,அதுவுமின்றி சிறப்பானது. தமிழ்நாட்டில் 12 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. 39 நகர கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. 3500 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை ஆட்சியில் உருவாக்கப்பட்டது. 1கோடியே 300 திட்டங்கள் தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நமது பாரதப் பிரதமர் மோடி எப்பொழுது பேசினாலும் தமிழகத்தை உயர்வாகவே பேசுகிறார். உதாரணமாக கம்பராமாயணம், ராஜராஜசோழன் கட்டிய தஞ்சாவூர் கோபுரம், திருக்குறள் பற்றியும் தெளிவாக கூறுகிறார்.
தமிழர்களின் விரோதி என்றால் திமுக தான். கடந்த 2011ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2016- 17ம் ஆண்டு பாரத பிரதமர் மோடியால் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு ஒரு பாரம்பரிய விளையாட்டு அது மிருக வதை அல்ல என்பதை அறிவிக்க பரிந்துரை செய்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றார். அரசின் முத்திரையில் இந்து சின்னமான கோயில் கோபுர சின்னத்தை தான் அரசு வேலையில் பயன்படுத்தியும், அதன் அடியில் அமர்ந்து தான் வேலை செய்து வருகின்றனர்.
ஆனால் இந்துக்களின் கோவில் வேண்டாம் எனக் கூறுகின்றனர். இந்த திராவிட கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ் கோயில்களின் நிலங்களை அபகரிக்கவும், கோயில் பணத்தை கொள்ளையடிக்கவும் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சி செய்கிறார்கள். தங்களுக்கு அரசாட்சி வேண்டும் அதனால் சம்பாத்தியம் வேண்டும் இதுதான் திராவிடத்தின் கொள்கை. இவர்களை அரசு ஆட்சியில் அமர விடக்கூடாது. தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெற வைக்க பூத் கமிட்டியினர் ஒவ்வொருவரும் வீீடு,வீடாக சென்று மோடியின் திட்டங்களை எடுத்துக் கூறி அதனை வாக்குகளாக மாற்ற வேண்டும் என பேசினார்.
0
0