எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்பிற்கான துணை கலந்தாய்வு

18 November 2020, 7:23 pm
Quick Share

கோவை: கோவையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் துணை கலந்தாய்வில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பித்தனர்.

தமிழகத்தில் எம்பிஏ எம்சிஏ படிப்புகளுக்கான 2020-21 ஆண்டிற்கான முதல்கட்ட கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற்றது. அதில் நிரப்பப்படாத இடங்கள் இன்று துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் துணை கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பித்தனர்.

அதுமட்டுமின்றி முதல் கட்ட கலந்தாய்வில் விண்ணப்பித்து கலந்து கொள்ள முடியாமல் தவறவிட்டவர்கள் கல்லூரிகளை மாற்ற விருப்பம் உள்ளவர்களும் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டனர். தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே இந்தத் துணைக் கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவ மாணவிகளுடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அனைவரும் ஒரு கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளனர்.