குமரியில் மீண்டும் அதிர்ச்சி.! அடுத்தடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி மோசடி.!

10 April 2021, 1:46 pm
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அடுத்தடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பெயரில் யாரோ ஒரு மர்ம நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் போலி கணக்கு தொடங்கி அந்த கணக்கு சப்-இன்ஸ்பெக்டருக்கு உரியது என நினைத்து பலரும் நண்பராக இணைந்தனர். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பெயரில் போலியாக கணக்கு தொடங்கிய அந்த மர்மநபர் முகநூல் பக்கத்தில் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் நண்பர்கள் உதவுமாறும் தகவல் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து பலர் அவருக்கு உதவ முன்வந்து எவ்வளவு பணம் தேவை என்று முகநூல் பக்கத்தில் கேட்டுள்ளனர். அதனை பயன்படுத்தி அந்த நபர் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்து வந்துள்ளார். அந்த மர்ம நபரின் மோசடியில் சப் இன்ஸ்பெக்டரின் உண்மையான நண்பர்கள் சிலரும் ஏமாந்த சம்பவம் நேற்று நடந்த நிலையில்,தனது பெயரில் யாரோ ஒரு நபர் முதல் நூலில் போலியாக கணக்கு தொடங்கி இருப்பதும்,

அதன் மூலம் பலரிடம் பணம் பறித்து வந்ததும் சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு தன்னுடைய நண்பர்கள் மூலமாக தெரிய வந்தது. இதனால் அந்த சப்-இன்ஸ்பெக்டர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் தன்னுடைய பெயரில் யாரோ ஒருவர் முகநூலில் போலியாக கணக்கு தொடங்கி பணம் பறித்து வருவதாகவும் , ஆகவே அந்த நபருக்கு யாரும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் எனவும் தனது உண்மையான முகநூல் கணக்கில் தகவல் பதிவிட்டார்.

இச்சம்பவம் ஒருபுறம் இருக்க நேற்று கோட்டார் காவல் நிலைய சப் -இன்ஸ்பெக்டர் சந்தியசோபன் பெயரில் மீண்டும் பொய்யான ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.இது குறித்து அந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்தியசோபன் தனது பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதனை நம்பி பொதுமக்கள், நண்பர்கள் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் முகநூலில் பதிவிட்டு வருகிறார். காவல்துறை அதிகாரிகள் பெயரிலேயே இது போன்று போலி கணக்கு தொடங்கப்பட்டும் சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 30

0

0