காப்புக்காட்டில் திடிர் தீ: வனப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க கோரிக்கை

Author: Udhayakumar Raman
9 March 2021, 7:51 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி நீதிமன்றம் பின்புறம் உள்ள காப்புக்காட்டில் திடிர் தீவிபத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில், கோடைக்கு முன்னரே அதிக வெயிலின் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. அதே போல் வனப்பகுதிகளிலும் மரம் செடிகள் தண்ணீரியின்றி காய்ந்து சருகாகி உள்ளது. இதே போல் தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள தேவர் ஊத்துப்பள்ளம், பதிகால் பள்ளம் பகுதிகளில் காப்புகள் காடுகள் உள்ளது. இந்த காப்புகாட்டில் திடிரென புகை வருவதை கண்ட பொதுமக்கள் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் காப்புகாட்டில் மேய்சல் தரையில் உள்ள புற்கள் மலமலவென எரிந்துக்கொண்டிருந்தது. ஒரு பகுதியில் தண்ணீர் ஊற்றி அனைத்தாலும் மற்றொறு பகுதியில் தீ வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்துக்கு காரணம் மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தனரா அல்லது கோடை வெயிலுக்கு தீப்பற்றியதா என வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீவிபத்தால் அப்பகுதியில் முயல், பாம்பும்புகள், காட்டுக்கோழி, காட்டுபன்றி, மான்,

மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் தீயில் கருகி உயிரிழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் ஆடுகள்,மாடுகள் மேய்சலுக்கு செல்கிறது. தீ முற்றிலும் அனைக்கப்பட்ட பிறகே வன விலங்குகள் உயிரிழந்ததா இல்லையான தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கோடை சீசன் துவங்கி உள்ளதால் இது போன்று காட்டு தீ ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 40

0

0