அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் திடீர் ஆய்வு…

4 August 2020, 4:18 pm
Quick Share

திருச்சி: திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் திரவநிலை ஆக்ஸிஜன் பிளான் டை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் டீன் வனிதாவிடம் கேட்டறிந்த அரசு தலைமை மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை குறித்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழ்நாட்டில் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து வருகிறோம்.
சென்னை உள்ளிட்ட பல இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைப்பெற்று வருகிறது.

திருச்சியில் பல இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை சரியாக பின்பற்றுவதில்லை. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் பத்தாயிரம் படுக்கை வசதிகள் உள்ளது. கொரோனா சிறப்பு மையத்தில் 780 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 540 படுக்கைகளும், மணப்பாறை, லால்குடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் 922 படுக்கைகள், கொரோனா சிறப்பு மையங்களில் 2090 படுக்கைகள் ஆகியவை இதில் அடங்கம். திருச்சி மாவட்டத்தில் 1118 பேர் கொரோனா காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.866 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். தமிழ்நாட்டில் நோய் எண்ணிக்கை அதிகமாகி தற்போது குறைந்து வரும் நிலையில் நாம் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இதுவரை 28 லட்சம் சோதனை செய்துள்ளோம். கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒருவர் வேறு எந்த காரணத்தினால் இருந்தாலும் கொரோனாவினால் இறந்த கணக்கில் தான் சேர்க்கிறோம். மக்கள் நோய் குறித்து கவனத்தோடு இருக்க வேண்டும். கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.அப்படி வழங்கும் போது நோயை கட்டுப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள 120 கொரோனா பரிசோதனை மையங்களில் 75% அரசு மருத்துவமனையிலும் 25%தனியார் மையங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்து வருகிறோம். கொரோனா தொற்றினால் தமிழ்நாட்டில் தான் அதிக அளவிலான மருத்துவர்கள் உயிரிழக்கிறார்கள் என்கிற ஐ.எம்.ஏ வின் அறிக்கை அரசின் அறிக்கை இல்லை.ஐ.சி.எம்.ஆர் அளிக்கும் அறிக்கை தான் அதிகாரப்பூர்வ அறிக்கை. மருத்துவ கழிவுகள் சுகாதரமான முறையில் அழிப்பதற்கு அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை, பரிசோதனை போன்றவற்றில் சிறு சிறு தவறுகள் நடந்து வருகிறது.அதை சரி செய்ய நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வருகிறோம். அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்று படிப்படியாக குறையும்.இறப்பு விகிதத்தை குறைக்க போர்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம் என்றார். இந்த ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு,மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன்,அரசு மருத்துவமனை டீன் வனிதா உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Views: - 8

0

0