பாதாளசாக்கடை பணியில் ஏற்பட்ட திடீர் மண்சரிவு… ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக பலி…

13 August 2020, 10:51 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு அருகே பாதாளசாக்கடை பணியில் ஏற்பட்ட திடீர் மண்சரிவு காரணமாக ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் மரப்பாலம் பகுதியில் மாநகராட்சியின் சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழாய் இணைப்பு பணிக்காக சுமார் 10 அடி ஆழத்தில் லக்காபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்ற ஒப்பந்த ஊழியர் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட திடீர் மண் சரிவின் காரணமாக ஒப்பந்த ஊழியர் ஆனந்த் மண்சரிவில் சிக்கிக்கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் பொக்லைன் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற மீட்பு பணியில் , கயிறு மூலம் ஒப்பந்த ஊழியர் ஆனந்தை மீட்டனர். ஒப்பந்த ஊழியர் ஆனந்தை பரிசோதித்த மருத்துவர் ஆனந்த் உயர்ந்ததாக தெரிவித்தார் மேலும் ஆனந்த் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Views: - 6

0

0