கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திடீர் இயந்திர தொழில் நுட்ப கோளாறு: டன் கணக்கில் கரும்பு காய்ந்து நாசம்: விவசாயிகள் கண்ணீர்…

Author: kavin kumar
15 October 2021, 7:32 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திடீர் இயந்திர தொழில் நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் டன் கணக்கில் கரும்பு காய்ந்து நாசம் அடைந்து வருவதால் விவசாயிகள் கண்ணீருடன் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை எண் 1 செயல்பட்டு வருகிறது. இந்த கரும்பு ஆலைக்கு நாள்தோறும் டிராக்டர் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆயிரக்கணக்கான டன் கரும்புகளை வெட்டி அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென இயந்திர தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் டிராக்டர்களில் லோடு லோடாக கரும்புகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் டன் கணக்கில் கரும்புகள் டிராக்டர்களில் குவிந்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கரும்பு வெட்டிய விவசாயிகள் டிராக்டர் மூலம் தங்கள் கரும்புகளை ஆலைக்கு ஏற்றி அனுப்பி அங்கு வெயில் காய்ந்து காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கரும்பு வெட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:- கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை எண் 1 (மூங்கில்துறைப்பட்டு) நிர்வாகம் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் நலன் கருதி இதுவரை இயங்கவே இல்லை, கடமைக்கு அதில் பணியாற்றும் அதிகாரிகள் ஆலையை இயக்கி வருகின்றனர். இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் விளைந்த கரும்பை குறித்த நேரத்தில் அனுப்ப முடியாமல் காலம் தாழ்த்தி கரும்பு வெட்டி அனுப்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டன் கரும்பு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் கஷ்டப்பட்டு கரும்பு வெட்டி அரவைக்கு கரும்பை அனுப்பும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்காமல் ஆலை நிர்வாகம் பல மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டு காலம் தாழ்த்தி பணம் வழங்கப்படுவதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடம் விவசாயிகள் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கரும்பு குறித்த நேரத்தில் வெட்டுவதற்கான இயந்திர போதிய வசதிகளை ஆலை நிர்வாகம் ஏற்படுத்தித் தரவில்லை, இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கரும்பு வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெட்டியவர்களுக்கு தகுந்த நேரத்தில் முறையாக பணத்தினை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 139

0

0