மனைவியை பிரிந்த சோகத்தில் எலக்ட்ரிஷன் தூக்கிட்டு தற்கொலை

19 April 2021, 7:24 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடியில் மனைவியை பிரிந்த சோகத்தில் எலக்ட்ரிஷன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி, பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32) இவர் அதே பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரகாஷ், விட்டு மனைவி பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த மன வருத்தத்தில் இருந்த பிரகாஷ், குடிபோதையில் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை, செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 59

0

0