வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு…மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு…!!

Author: Aarthi
12 October 2020, 2:28 pm
Quick Share

வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சமூக நல அமைப்புகள், விவசாய சங்கங்கள் என உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதில், அடுத்த 4 வாரத்துக்குள் மத்திய அரசு திலளிக்க உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை பெற முடியாது என்றும், வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் பெரு நிறுவனங்கள் வேளாண் உற்பத்தி சந்தைக்குழுக்களை கைப்பற்றும் அபாயம் இருப்பதாகக் கூறியும் இச்சட்டங்களுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Views: - 38

0

0