சர்வர் பிரச்சனை காரணமாக பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தம்: அமைச்சர் காமராஜ் பேட்டி..

Author: Udayaraman
16 October 2020, 9:25 pm
Quick Share

திருவாரூர்: நியாய விலைக் கடைகளில் சர்வர் பிரச்சனை காரணமாக பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், பழைய முறையே கடைபிடிக்கப்படும் எனவும் திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உழைக்கும் மகளிருக்கான மானிய விலை இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பங்கேற்று மகளிருக்கு மானிய விலை இருசக்கர வாகனங்களை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் என்கிற திட்டம் ஒரு அம்சமாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை முழுவதுமாக 2 கோடியே 2 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டன ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டபோது பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தன ஆகையால் பழைய ரேஷன் அட்டையும் பயன்படுத்தி நாட்களையும் பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது சிறுசிறு நடைமுறை சிக்கல்கள் இருப்பது வழக்கமான ஒன்றுதான். கிராமப்புறங்களில் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் சர்வரில் பொருட்கள் வாங்குவதில் பிரச்சனை உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர் எனவே பயோ மெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது பழைய முறையிலேயே பொதுமக்கள் நியாய விலைக் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்

இந்தப் பருவத்தில் தற்போதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் 816 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராமப் பகுதிகளில் செயல்படும் நியாயவிலை கடைகளில் பயோமெட்ரிக் முறை சர்வர் பிரச்சனை இருப்பதால் பொருட்கள் தாமதமாக வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் ஆகையால் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. நியாய விலைக் கடைகளில் பழைய முறையே செயல்படுத்தப்படும்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நியாயவிலை கடைகளுக்கு வழங்குவதற்கு மூன்று மாதத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கையிருப்பில் உள்ளன. அக்டோபர் 1ஆம் தேதி அன்று தொடங்கிய இந்த ஆண்டிற்கான காரிப் பருவத்தில் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது 816 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டு அதன் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

உணவுத் துறையின் புலனாய்வு அமைப்பிற்கும் லஞ்ச ஒழிப்புத்துறை புகார் வரும்பட்சத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் முறைகேட்டுக்கு தமிழக அரசு ஒருபோதும் இடமளிக்காது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 34

0

0