நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள் : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

30 November 2020, 1:55 pm
Ariyalur Protest - Updatenews360
Quick Share

அரியலூர் : ஊதியம் வழங்கவில்லை என துப்புரவு பணியாளர்கள் அரியலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 120 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நிர்ணயிக்கபட்ட சம்பளமே இது நாள் வழங்கபட்ட வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட ஊதிய உயர்வு 17 மாதங்களாக வழங்கவில்லை எனக்கூறி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் பிஎப் பணம் இன்னும் தரவில்லை என்றும், இருபது ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 19

0

0