“அரசின் திட்டங்கள் விவசாயிகளை முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுங்கள்” : வேளாண் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு..!

20 November 2020, 9:12 pm
Quick Share

கோவை: மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை வேளாண் மற்றும் வேளாண் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாணன் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, கோயம்புத்தூர் வேளாண்மை விற்பனைக்குழு ஆகிய துறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வில் வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:- வேளாண்மைத் துறையின் மூலம் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கோவையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையினரால் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசாத்திட்ட இலக்கினை முழுமையாக அடையவேண்டும். இத்திட்டத்தின் விவசாயிகளுக்கு நிறுவனங்களினால் வழங்கப்படும் நுண்ணீர் பாசன உபகரணங்களின் தரம் குறித்து வட்டார வேளாளர்மை, தோட்டக்கலை உதவி இயக்கும் மற்றும் வேளாண்மை/ தோட்டக்கலை அலுவலர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தரமான உபகரணங்கள் கிடைப்பதினை உறுதி செய்ய வேண்டும்.

ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கால்நடைத் துறை சம்பந்தமான இனங்களில் கால்நடை துறையினரால் கால்நடைகள் வாங்கும் பொழுது அக்கால்நடைகள் ஆரோக்கியமானதாக நல்ல பலன் அளிக்க கூடியதாக மற்றும் சிறப்பானதாக உள்ளதா என்பதினை வட்டார வேளாண்மை தோட்டக்கலை
உதவி இயக்குநரும், வேளாண்மை, தோட்டக்கலை அலுவலரும் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழிகாட்ட வேண்டும். வேளாண் பொறியியல் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் சூரிய ஒளி பல்புகள் வழங்குதல் சூரிய ஒளி வேலி அமைத்தல் மற்றும் இதர திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறயின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் விநியோக தொடர் சங்கிலி நிர்வாகத்திட்டத்தின் கீழ் செயப்படுத்தப்படும் ஏழு மையங்களிலும்
சிறப்பாகவும் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும் செயல்படுத்தவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.

Views: - 0

0

0