சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு: இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கைவரிசை….
Author: kavin kumar23 October 2021, 2:22 pm
சென்னை: சென்னையில் கோவிலுக்கு சென்று விட்டு சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் 8 சவரன் தாலி செயின் பறித்து சென்ற சம்பவம் பெரம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் சீனிவாசன் தெரு பகுதியை சங்கரேஸ்வரி/35, இவரது கணவர் கன்னிகாபுரம் பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். சங்கரேஸ்வரி பழனி ஆண்டவர் கோவில் தெருவில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு பாரதி சாலை மாநகராட்சி பூங்கா அருகே நடந்து வரும் பொழுது இருசக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து வந்த நபர் கழுத்தில் அணிந்து இருந்த 8 சவரன் தாலி செயினை அறுத்து கொண்டு சென்றுள்ளான். இச்சம்பவம் குறித்து சங்கரேஸ்வரி அளித்த புகாரில் செம்பியம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
0
0