10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு பண்ணையார் சமுதாய நலச் சங்கம் ஆர்ப்பாட்டம்…!!

Author: kavin kumar
29 August 2021, 2:57 pm
Quick Share

தூத்துக்குடி: 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு பண்ணையார் சமுதாய நலச் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தூத்துக்குடியில், மிகவும் பின்தங்கியோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒரு குறிப்பிட்ட வன்னியர் களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு பண்ணையார் சமுதாய நலச் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விவிடி சிக்கில் அருகில் நடைபெற்றது. மிகவும் பின்தங்கியோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒரு குறிப்பிட்ட வன்னியர் களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்து, பண்ணையார் சமுதாயம் மற்றும் பிற மிகவும் பின்தங்கிய சமூகத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

அதனால் இதனை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு பண்ணையார் சமுதாய நலச் சங்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு பண்ணையார் சமுதாய நலச் சங்கம் மாநில செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பண்ணையார் சமுதாய நலச் சங்கம் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கீழக்கரை சங்கர் சிறப்புரையாற்றினார். பொருளாளர் வி.கே.எஸ் மணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 173

0

0