தமிழக அரசின் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்: சாத்தூரில் தேவையின்றி சுற்றிய 60 க்கும் வாகனங்கள் பறிமுதல்

15 May 2021, 7:54 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூரில் தமிழக அரசு அறிவித்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடு விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தேவையின்றி சுற்றிய 60க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2வது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதன்படி 10 மணிக்கு மேல் தேவையில்லாமல் சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கிருஷ்ணன்கோவில், முக்குராந்தல் பகுதி, பேருந்து நிலையம், மதுரை பேருந்து நிறுத்தம்,

பைபாஸ் விளக்கு ஆகிய பகுதிகளில் சாத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் முருகன் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணசாமி, சையது இப்ராஹிம், ராஜேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் உரிய ஆவணம் இன்றி தேவையின்றி சுற்றி வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்படி கார், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் என சுமார் 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் ஊரடங்கும் முடிவடைந்த பின் வாகனங்களை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

Views: - 37

0

0