காங்கேயம் அரசு மருத்துவமனையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு…

14 May 2021, 7:59 pm
Quick Share

திருப்பூர்: காங்கேயம் தாலுகா அரசு மருத்தவமனையில் வழங்கப்பட்டு வரும் கொரோனா நோய்த்தடுப்பு சிகிச்சை குறித்து தமிழக செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது.மருந்துகள், தடுப்பூசிகள், ரெம்டெசிவர் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு ஆகியவற்றை டாக்டர்களிடம் கேட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் மருத்துவ மனைகளில் பணியாற்றக்கூடிய மருத்துவர்களிடம் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரக்கூடியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்வது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருவதாகவும், தேவைக்கேற்ப கொரோனா சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்படும் எனவும், தெரிவித்தார். காங்கேயத்தில் 10 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் பற்றாக்குறை உடனடியாக சரி செய்படும் என்றார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்,DRO சரவணகுமார் உள்பட பல அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Views: - 36

0

0