தமிழகத்தை மூன்றாக பிரித்து புதிய மாநிலங்களை அமைக்க வேண்டும்:இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி…

13 July 2021, 3:53 pm
Quick Share

நெல்லை: தென் மாவட்டத்தை மையமாகக் கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும். தமிழக வளர்ச்சிக்கும் நிர்வாக வசதிக்கும் ஏற்றவாறு தமிழகத்தை மூன்றாக பிரித்து புதிய மாநிலங்களை அமைக்க வேண்டுமென நெல்லையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி முருகானந்தம் என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை சந்திக்க வருகை தந்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி முருகானந்தம் தாக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து நிர்வாகிகளையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்கிறோம் என தெரிவித்தார். மேலும் நெல்லையப்பர் திருக்கோவிலில் 17 ஆண்டுக்கு பின்னர் 3 வாயில்கள் திறக்கப்பட்டு பூஜை நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

தென் மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்கான எந்த திட்டமும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் கொண்டுவரப்படவில்லை எனவும், தென்மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவரும் நிலையில், தற்போது அது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது என தெரிவித்தார். கொங்கு மாநிலம் அமையவேண்டும் என்ற கருத்தும் தற்போது வலிமை பெற்றுள்ளது. இது போன்ற கருத்துக்கள் பிரிவினை வாதம் இல்லை எனவும், சிறிய மாநிலத்தை பிரித்தால் அது நிர்வாகம் செய்ய வசதியானதாக இருக்கும் எனவும், நிர்வாக வசதிக்காக தான் மாநில பிரிப்பை கேட்கிறோம் எனவும் தெரிவித்தார். வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தான் மாநில பிரிவினை முன்னெடுக்கப்படுகிறது எனவும்,

தென்மாவட்டங்கள் வளர்ச்சி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. தென்மாவட்டங்கள் தேச விரோத சக்திகள் ஊடுருவி வளர்ச்சியை தடை செய்கின்றனர் எனவும் தெரிவித்தார். உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நடந்துவருகிறது. தென் மாவட்ட வளர்ச்சி சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை மையமாக கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும். தமிழகத்தை மூன்றாக பிரித்து 3 மாநிலங்கள் உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார். மாநிலங்கள் பிரிக்கும் முயற்சியை பிரிவினை வாதம் என எதிர்கடசிகள் சாயம் பூசுவது தவறு எனவும், இந்த கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இது குறித்து பிரதமர் மற்றும் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பேசிய கருத்து பிரிவினை வாதம் நாங்கள் முன்வைப்பது வளர்ச்சிக்கான கோரிக்கை எனவும் தெரிவித்தார். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முழு காரணம் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தான் எனவும், ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவருவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுப்பதோடு நாடு முழுதும் எதிர்கட்சிகள் ஆதரவை பெற்றுவருகிறார் எனவும் தெரிவித்தார். ரஜினி காந்த் எப்போதும் ஆன்மீக மற்றும் தேசிய அரசியலை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்த அவர் பிரதமர் நினைத்தால் ஒரு நாள் இரவில் புதிய மாநிலத்தை உருவாக்க முடியும்.திமுக ஒன்றியம் என மத்திய அரசை சொன்னதற்கு பின்னர் கொங்கு நாடு கோரிக்கை பேச்சு வழுபெற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.

லியோனியை பாடநூல் கழக தலைவராக்கியது கண்டனத்துக்கு உரியது எனவும் மத்திய அரசை எதிர்த்தவர்களுக்கு எல்லாம் பெரிய பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.திமுகவும் ஸ்டாலினும் பிரிவினைவாதத்தை எப்போதும் முன்னெடுத்தது கிடையாது.தற்போது பிரிவினைவாதிகள் ஸ்டாலினை தவறாக வழிநடத்திகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

Views: - 85

0

0