தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

6 February 2021, 2:57 pm
Quick Share

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நவம்பர் 2015 முதல் வழங்கவேண்டிய டிஏ அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை போக்குவரத்து ஓய்வு பெற்றவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும், 2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஓய்வுபெற்ற விளக்கு உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் தேவராஜ் உள்பட ஏராளமான தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற அமைப்பு அனைத்து நிர்வாகிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது பேசிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற அமைப்பின் பொதுச் செயலாளர் தேவராஜ், வருகின்ற 16 ஆம் தேதி அன்று கரூரில் உள்ள போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Views: - 0

0

0