புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி அளிக்க கோரி நர்சிங் கல்லூரி மாணவர்கள் தர்ணா

22 January 2021, 3:22 pm
Quick Share

புதுச்சேரி: நர்சிங் கல்லூரி செமஸ்டர் தேர்வை கடந்த முறை போல புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் முன்பு 200க்கும் மேற்பட்ட நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து கடந்த மாதம் புதுச்சேரியில் அனைத்து கல்லூரிகளும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வை புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கல்லூரி துவங்கி ஒரு மாதத்திற்குள் பாடங்களை முழுவதும் முடிக்காமல் தேர்வு வைப்பதால்

மாணவர்கள் தேர்வு எழுதுவது சிரமம் என்பதால் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்வு போல இம்முறையும் பாட புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் இருக்கக்கூடிய அனைத்து நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி பல்கலைக்கழக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி துணை வேந்தர் தங்களை கடந்த முறை போல பாட புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி அளிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Views: - 3

0

0