டாக்சி ஓட்டுனர் கடத்தி ஆந்திராவில் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரண்

24 November 2020, 3:35 pm
Quick Share

வேலூர்: கடலூரை சேர்ந்த டாக்சி ஓட்டுனர் கடத்தி ஆந்திராவில் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் அருள்மொழி இவருடைய மகன் வினோத்குமார்(வயது 27). இவர் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கால் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த வினோத்குமாரை கடந்த 16-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த அவரை, 5 பேர் கொண்ட கும்பல் வேனில் கடத்தி சென்றுள்ளது. இதுகுறித்து வினோத்குமாரின் தந்தை அருள்மொழி கடலூர் நியூடவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட வினோத்குமாரையும், கடத்திச் சென்ற 5 பேரையும் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராமாபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும், தலை சிதைந்த படியும் கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் ராமாபுரம் காவல் நிலையத்திர்க்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திர்க்கு வந்த காவல் துறையினர் உடலின் அருகில் இருந்த அடையாள அட்டையை பார்த்த போது, அதில் வினோத்குமார் செம்மண்டலம் கடலூர் மாவட்டம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து கொலை செய்யப்பட்டவர் வினோத்குமார் என்பது தெரியவந்தது. அவரது கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் ராமாபுரம் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வினோத்குமார் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆரணியை சேர்ந்த கால் டாக்சி உரிமையாளர் நாராயணன்(61), சென்னை தண்டையார்பேட்டை யை சேர்ந்த டெல்லி(33), மகேஷ்குமார்(35), விநாயகம்(36) ஆகியோர் இன்று காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் 4 பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆரணியை சேர்ந்த நாராயணன்(61) என்பவர் சென்னையில் கால் டாக்சி நடத்தி வருவதாகவும் அவரிடம் வேலை செய்து வந்த வினோத்குமார் நாராயணனின் மகளை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆந்திரம் அடைந்த நாராயணன் கூலிப்படையை வைத்து வினோத்குமாரை கடத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

Views: - 0

0

0