பரிசல் மூலமாக கிராமங்களுக்கு சென்று மாணவர் சேர்க்கை : அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்!!

5 September 2020, 7:02 pm
Studnet Admision 1 - Updatenews360
Quick Share

கோவை : கிராமங்களுக்கு பரிசல் மூலமாக நேரில் சென்று அரசு பள்ளிக்கு மாணவர் சேர்க்கையில் ஈடுபட்ட ஆசிரியர்களின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காரமடை ஒன்றியத்தில் மொத்தமாக 123 அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளது. இதில் சிறுமுகை லிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியானது காரமடையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளி ஆகும்.

இப்பள்ளிக்கு ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் பவானிசாகர் நீர் தேக்க பகுதியான காந்தவயல், உலியூர் ஆகிய பகுதிகளில் இருந்து மாணவர்கள் சேர்வார்கள். ஆனால் இந்த ஆண்டு பவானி நீர்தேக்க பகுதியில் நீர் அதிகமாக இருப்பதாலும், கொரோனா நோய்த் தொற்று காரணமாகவும் மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 17ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் காரமடை வட்டார கல்வி அலுவலர் ரமேஷ் பாபு மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர்கள் வீடுகளுக்கே சென்று சேர்க்கை பணியில் ஈடுபட்டனர்.

இதில் 6ஆம் வகுப்பில் குணா, ஆனந்த், பூபதி, குமார், சீதா ரீனா, நதியா ஆகிய ஏழு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை வழங்கப்பட்டு கற்பித்தலுக்கான வழிமுறைகளை வீட்டிற்கே சென்று மேற்கொள்வது பற்றி ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Views: - 0

0

0