வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: 1410 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

Author: kavin kumar
29 August 2021, 2:31 pm
Quick Share

திருவள்ளூர்: அத்திப்பட்டு வடசென்னை அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சாம்பல் கையாளும் பிரிவில் ஏற்பட்ட பழுது தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1410 மெகாவாட் மின் உற்பத்தி முற்றிலும் முடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னைஅனல்மின் நிலையத்தில் உள்ள இரண்டு நிலைகளில் ஐந்து அலகுகளில் 1,830 மெகாவாட் மின் உற்பத்தியினது நடைபெற்று வந்த நிலையில், நிலை இரண்டில் முதல் அலகில் நேற்று முன்தினம் 600 மெகாவாட் மின் உற்பத்தி ஆனது. நிலக்கரி சாம்பல் கையாளும் பிரிவில் பாய்லர் வெடித்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் 2வது அலகில் நிலக்கரி சாம்பல் கையாளும் பிரிவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 1,200 மெகாவாட் மின் உற்பத்தி முற்றிலும் முடங்கியது. மேலும் முதல் நிலையில் முதல் அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தியானது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலகில் பராமரிப்புப் பணிகளுக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில்
3வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடைபெறுகிறது. நிலக்கரி சாம்பல் கையாளும் பிரிவில் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால் மட்டுமே மின் உற்பத்தியை மீண்டும் தொடங்கும் நிலைஏற்பட்டுள்ளதாக மின்வாரிய ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 125

0

0