குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

5 July 2021, 2:31 pm
Quick Share

சென்னை: கொளத்தூரில் குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் மஞ்சு. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது தங்கை சரண்யா, சரண்யாவின் கணவர் கொளத்தூர் திருவீதி அம்மன் தெருவைச் சேர்ந்த மோளம் கார்த்திக். சரண்யாவுக்கும் , கார்த்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரண்யா மஞ்சுவுடன் தாய் வீட்டில் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், கார்த்திக் சரண்யாவை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். சரண்யா வர மறுத்ததால் கார்த்திக் சரண்யாவின் அக்கா மஞ்சுவை அடித்து தனது மோட்டார் சைக்கிளில் கொளத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் மஞ்சு கார்த்திக்கின் வீட்டில் தீடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கொளத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் மஞ்சுவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார்த்திக் மஞ்சுவை எதற்காக அடித்து தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். மஞ்சு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 129

0

0