திருமணமாகாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை

Author: Udhayakumar Raman
6 August 2021, 3:58 pm
Quick Share

சென்னை: திருமணமாகாத ஏக்கத்தில் இளம்பெண் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் அடுத்த பால் பண்ணை இடையில் நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தலிங்கம்.இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருடைய மகள் காயத்ரிதேவி (29 ) வீட்டில் இருந்து வந்தார்.காயத்ரி தேவியை பலரும் பெண் பார்த்து விட்டு சென்றால் , திருமணம் ஆகாமல் சில வருடங்களாக திருமணம் ஆகாத மன ஏக்கத்தில் இருந்துள்ளார்.இந்நிலையில் , இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதனால் வலியால் அலறி துடித்த அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் மூலம் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடலில் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்திற்கு மருத்துவமனை மூலமாக தெரிவிக்கப்பட்டது. மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் , இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார். திருமணமாகாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 126

0

0