டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழப்பு: ஒரே கிராமத்தில் மேலும் பலருக்கு டெங்கு…

Author: kavin kumar
11 August 2021, 2:28 pm
Quick Share

அரியலூர்: டெங்கு காய்ச்சலுக்கு இளம் பெண் பலியான சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பிலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மேலத்தெருவில் 39 பேருக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில் அதில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 3 பேருக்கும்‌ கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதார துறையினர் அக்கிராமத்தில் உள்ள 500 பேருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். செந்துறை‌வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி தலைமையில் 30 பேர் கொண்ட மருத்துவகுழுவினர் முகாமிட்டு வீடு வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர்.

செந்துறை தாசில்தார் குமரய்யா , வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று தண்ணீர் தேங்கியுள்ளதா என கண்டறிந்து அதனை சீர்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி சென்னையில் இருந்து வந்த பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த நிவேதா என்ற 23 இளம் பெண் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Views: - 197

0

0