உற்சாக குளியல் போடும் ஸ்ரீரங்கம் கோவில் யானைகள்…!

Author: kavin kumar
25 October 2021, 3:29 pm
Quick Share

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் குளிப்பதற்கு 3லட்சம் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியில் யானைகள் உற்சாக குளியல் போட்டது‌.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திருபணிக்களுக்காக ஆண்டாள்‌ மற்றும் லட்சுமி என்ற இரண்டு யானைகள் உள்ளன.இந்த யானைகளுக்கென குளிப்பதற்க்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் கோயிலுக்கு சொந்தமான “உடையவர் தோப்பில்” 56 அடி நீளம்,56 அடி அகலம் , 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய நீச்சல் குளம் கட்டப்பட்டது.குளத்தில் முதல் முறையாக குளிக்க வைப்பதற்காக‌ பாகன்கள் யானைகளை அழைத்து வந்தனர்.

கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்பு கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய இரண்டு யானைகளும் ஆனந்த குளியல் போட்டது‌.தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி மாறி, மாறி பீய்ச்சி விளையாடியதை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். ஏற்கனவே திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில் யானைக்கும் மற்றும் மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் உள்ள யானைக்கும் இதேபோன்ற தொட்டி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 186

0

0