கோயில்களில் கொள்ளையடித்தவர் கைது: ரூ. 8.6 லட்சம் மதிப்பிலான பொருட்களை மீட்ட போலீசார்

Author: Udhayakumar Raman
5 September 2021, 5:41 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கோயில்களில் கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்து ரூ. 8.6 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் மீட்டனர்.

குமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கோயில்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றாவாளிகளை விரைவாக பிடிக்க கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் குளச்சல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்தங்கராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குருந்தன்கோடு ஆசாரிவிளை சந்திப்பில் வைத்து சரல் பகுதியை சேர்ந்த அனிஷ்ராஜ் என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர். அவரை விசாரணை செய்ததில் அவர் மீது இரணியல் காவல் நிலையத்தில் 10 வழக்குகளும்,

மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் 4 வழக்குகளும், வெள்ளிசந்தை காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், சுசீந்திரம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் 1 வழக்குகளிலும் ஆக 20 வழக்குகளில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்து 600 கிலோ வெண்கல பொருள்களும் சுமார் 60,000 ரூபாய் 16 கிராம் தங்க நகைகளும் ஆக மொத்தம் 8,60,000 ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றாவாளிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து கொள்ளை போன பொருட்களை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Views: - 223

0

0