ஊதியம் வழங்காததை கண்டித்து தற்காலிக சுகாதார பணியாளர்கள் ஆட்சியரிடம் புகார்

8 April 2021, 3:39 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் வாக்குச்சாவடி மையத்தில் தற்காலிக சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

தமிழகம் முழுவதும் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பல்வேறு பணிகளுக்கு வாக்குச் வாக்குச்சாவடியில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம் அந்த வகையில், கொரோனா காரணமாக தற்காலிக சுகாதார பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதில் திருச்சி பொன்மலைப்பட்டி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை தற்காலிக சுகாதார பணியாளர்களாக ஆர்.ஐ. மூர்த்தி வேலைக்கு அமர்த்தினர்.

அவர்களுக்கு ஊதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார். தற்போது அதனை 250 ஆக குறைத்துள்ளனர். எனவே தற்காலிக தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு அன்று இரவு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உரிய ஊதியத்தை பெற்ற தர கோரி பாதிக்கப்பட்ட வாலிபர்கள் 28 பேர் மனு அளித்தனர்.

Views: - 31

0

0