தொடர் வாகன விபத்தை தடுக்க தற்காலிகமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கை

20 January 2021, 4:49 pm
Quick Share

தருமபுரி: தொப்பூர் கணவாயில் தொடர் வாகன விபத்தை தடுக்க, தற்காலிகமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டம், தொப்பூர் தேசிய நான்கு வழிச்சாலை இந்திய அளவில் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தினந்தோறும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இவ்வாறு போக்குவரத்து மிகுந்த தொப்பூர் கணவாய் சாலை போதிய பாதுகாப்பு இன்றி, பல்வேறு பகுதிகளில் தாழ்வாகவும், வளைவாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால்,

தொப்பூர் கணவாயில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் அப்பாவி வாகன ஓட்டிகள் பலியாவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக கடந்த, 12 அன்று தொப்பூர் தொப்பூர் கணவாயில் முன்னே ஏற்பட்ட விபத்து காரணமாக சாலையோரம் நின்றிருந்த, 12 கார்கள் உள்ளிட்ட, 16 வாகனங்கள் மீது ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு சிமென்ட் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில், 4 பேர் இறந்தனர். கடந்த ஓராண்டில் மட்டும், இந்த பகுதியில் ஏற்பட்ட விபத்தால், 42 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து கிடப்பில் போடப்பட்ட கட்டமேட்டில் இருந்து தொப்பூர் வரையிலான மேம்பால பணியை துவங்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் வரை மீண்டும் விபத்துக்களை தடுக்கும் வகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், போக்குவரத்துத்துறையினர், காவல்துறை மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் பெறப்பட்ட ஆலோசனையின் படி, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கட்டமேட்டில் இருந்து தொப்பூர் கணவாய் காவலர் குடியிருப்பு வரை வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, 22 இடங்களில் மில்லி குரோலிங் வகையில் சாலைகளில் தடுப்புக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் வாகனங்களின் அதிர்வை ஏற்படுத்தும் ரோடு மார்க்கிங் செய்துள்ளதுடன், முக்கியமான, நான்கு இடங்களில் அபாய விளக்கு எச்சரிக்கை அமைத்துள்ளனர். மேலும், இப்பகுதியில் வாகன ஓட்டிகளின் காதுகளுக்கு கேக்கும் வகையிலான ஒலி பெருக்கிகள் அமைக்கப்பட்டு வாகனங்களை மெதுவாக இயக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால், கடந்த சில தினங்களாக தொப்பூர் கணவாயில் விபத்துக்குள் குறைந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக விபத்தை தடுக்க பணிகள் நடைபெற்று வருவதால் தொப்பூர் வழியாக செல்லும் வாகனங்கள் ஒரு வழிபாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெறில் ஏற்பட்டுள்ளது. இதற்கு முற்றிலும் தீர்வு காணும் வகையில் கிடப்பில் போட்டப்பட்டுள்ள கட்டமேட்டில் இருந்து தொப்பூர் வரையிலான மேம்பால பணியை துவங்க மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 0

0

0