தனியார் பிளாஸ்டிக் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து: பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி நாசம்

27 January 2021, 7:52 pm
Quick Share

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி அருகே தனியார் பிளாஸ்டிக் தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி நாசம் அடைந்தது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பேலட்டுகள் தயாரிக்கும் குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயானது கொழுந்து விட்டு எரிந்து கரும்புகை சூழ்ந்தது தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி, திரூர், திருபெரும்பூதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள தீயணைப்பு நிலைய வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வெள்ளவேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது. தீ விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Views: - 0

0

0