தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!

By: Udayachandran
3 October 2020, 1:42 pm
Pondy Fire - updatenews360
Quick Share

புதுச்சேரி : சேதராப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இங்கு அமைத்துள்ள தனியாருக்கு சொந்தமான காப்பர் ஒயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது.

தீயானது கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரி, வில்லியனூர், கோரிமேடு, சேதராப்பட்டு ஆகிய பகுதிகளிலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தீயில் இருந்து வெளியான கரும்புகை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் கருமண்டலாக காட்சியளிக்கிறது. மேலும் தீ விபத்து குறித்து சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 39

0

0