கொரோனா சிகிச்சை மையமாக மாறும் தாய் சேய் நல மையம்: ஆட்சியர் நேரில் ஆய்வு

16 June 2021, 2:59 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் தாய் சேய் நல மையம் கூடுதல் கட்டிடத்தை, கொரோனா சிகிச்சை கட்டிடமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். பல்வேறு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் தாய்சேய் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாததால், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில் தாய்சேய் நல மையம் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு பணி முடிவு பெறும் நிலையில் உள்ளது.

தற்போது கொரோனா நோயாளிகளும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைபெற இடம் பற்றாக்குறையாக உள்ளதால், இந்த புதிய கட்டிடத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை பெற ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்ததால், இதனை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி பார்வையிட்டு பணியை விரைந்து முடித்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்ய ஆய்வு செய்தார்.

Views: - 127

0

0