ஏரியில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு…

2 September 2020, 12:04 am
Quick Share

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே ஏரியில் இரண்டு சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகேயுள்ள கரடி குட்டை என்னும் பகுதியில் உள்ள ஏரியில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழைக்கு தற்பொழுது ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ரேகா மற்றும் ஜனனி என்ற 2 சிறுமிகள் ஏரியின்  ஓரம் விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென இருவரும் நிலை தடுமாறி ஏரியில் விழுந்துள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் மீட்க முயன்றபோது நீரில் மூழ்கி உள்ளனர்.

இதுகுறித்து பொதுக்கள் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் தகவல் பொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் 2 சிறுமிகளை  சுமார் ஒரு மணி நேரம் போராடி சடலமாக மீட்டனர். இதனை அடுத்து இரு சிறுமிகளின்  உடலை கைப்பற்றி  உடல்கூறு ஆய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நாற்றம்பள்ளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 7

0

0