வழி தவறி சென்ற 2 வயது சிறுவன் சுமார் ஒரு மணி நேரத்தில் மீட்பு

19 April 2021, 1:59 pm
Quick Share

வேலூர்: விருதம்பட்டு போலீசார், வழி தவறி சென்ற 2 வயது சிறுவன் சுமார் ஒரு மணி நேரத்தில் மீட்டு பெற்றோர்களிடத்தில் ஒப்படைத்தனர்.

காட்பாடி, காந்திநகர் முதல் கிழக்கு சாலையில் வசிப்பவர் பெற் குண்ட் திவாரி அவரது மனைவி நிவாதிவாரி வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு வயது மகன் ஹரிஷ் திவாரி உள்ளனர். நேற்று பெற்றோர்கள் வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது இவர்களின் மகள் வீட்டை விட்டு வழி தவறி வெளியே சென்று விட்டார். சிலக் மில் சாலையில் அழுதுக் கொண்டிருந்த குழந்தையை பார்த்த பொதுமக்கள் உடனே விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விருதம்பட்டு SI ஆகாஷ் அங்கு சென்று காணாமல் சென்ற குழந்தையை மீட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் பெற்றோர்களிடத்தில் ஒப்படைத்தனர்.

Views: - 12

0

0