உதகையில் சாரல் மழையில் நடைபெற்ற 74வது சுதந்திர தின விழா…

15 August 2020, 3:16 pm
Quick Share

நீலகிரி: உதகையில் சாரல் மழையில் நடைபெற்ற 74வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னாசென்ட் திவ்யை தேசிய கொடியை ஏற்ற காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவானது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த முறை கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கனமழையால் மாவட்டம் பல இன்னல்களை சந்தித்தது. இதையடுத்து இந்த முறை 74 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவானது அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்பு சிறப்பாக பேரிடர் மீட்புப் பணியில் பணியாற்றிய தீயணைப்பு துறையினர் மற்றும் கொரொனோ பணியில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என அனைவருக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்களின் கொரோனா தொற்றிலிருந்து நம் நாட்டை காக்க பொதுமக்கள் கட்டுப்பாடுகளை எவ்வாறு கடைபிடித்து நோயை வெல்வது என விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. ஆண்டுதோறும் உதகையில் நடைபெறும் சுதந்திர தின விழாவானது பிற்பகல் வரை கலை நிகழ்ச்சிகளுடன் ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் நிலையில் இந்த முறை மிக எளிமையாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 30

0

0