வேளாண் அலுவலர் வீட்டின் பின்புற கதவை உடைத்து 11 பவுன் நகை கொள்ளை

10 November 2020, 8:24 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் வேளாண் அலுவலர் வீட்டின் பின்புற கதவு உடைத்து 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் அருகே பாரதிநகரில் வசித்து வரும் பாலமுருகன் இவர் இராமநாதபுரம் மாவட்ட வேளாண் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியூர் சென்று விட்டு இன்று வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 11 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஊரக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல்த்துறையினர் சம்பவம் குறித்து தடவியல் நிபுணர்கள் மூலம் தடங்களை கேரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 18

0

0