பொதுமக்கள் தேவைகளை நிறைவேற்றும் அரசு அதிமுக அரசு:அமைச்சர் நீலோபர் கபீல் பேச்சு

21 August 2020, 9:24 pm
Quick Share

திருப்பத்தூர்: பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை எந்தெந்த காலகட்டத்தில் என்ன தேவையோ அவையெல்லாம் அதிமுக அரசு வழங்கி வருவதாக அமைச்சர் நீலோபர் கபீல் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பனிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான ஊட்டச்சத்து மாவு வழங்கும் திட்டம் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் கலந்து கொண்டு கர்பிணி தாய்மார்கள் மற்றும் முதியோர்களுக்கு ஊட்டசத்து மாவு பாக்கெட்டுகளை வழங்கினார்.

இதையடுத்து அவர் பேசுகையில், ” பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை எந்தெந்த காலகட்டத்தில் என்ன தேவையோ அவையெல்லாம் தமிழக அரசு வழங்கி வருகிறது. குழந்தைகள் கருவில் இருக்கும்போதே குழந்தைக்கு தேவையான சத்தான உணவுகள் தடுப்பூசி உள்ளிட்ட வைகளை அளிக்கக்கூடிய வகையில் அரசு செயல்பட்டு வருவதாகவும், அதேபோல் பெண்களுக்கு கர்பிணி காலத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கி அவர்களை மாதம்தோறும் பரிசோதித்து வருகின்றனர்.

மேலும் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் சஞ்சீவி பெட்டகம் என்ற ஒரு சத்துள்ள பொருட்கள் மற்றும் தாய் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய பால் சுரக்க கூடிய வகையில் லேகியங்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கி வருவது தாய்மார்களுக்கு அனைவருக்கும் தெரியும். மேலும் முன்னாள் முதல்வர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் தொடர்ந்து அதிமுக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடி பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை கீரை வகைகள் முட்டை ,பழவகைகள் கூடிய சத்தான உணவுடன் வழங்கப்பட்டு வருவதாகவும்,

அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் கர்ப்பிணி பெண்களுக்கு அயோடின் குறைவாக இருந்தால் அது கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிக்கும் என்பதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சத்தான உணவுப் பொருட்களும் இதுபோன்ற ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டு வரும் நிலையில் முதியோர்களுக்கும் எதிர்ப்பு சக்தி இல்லாத காலகட்டத்தில் கொரோனா போன்ற நோய்கள் தாக்கக் கூடிய நிலையை மாற்றும் வகையில் அவர்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கும் திட்டத்தினை தொடங்கி அரசு தமிழகத்தில் உள்ள அணைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து திடங்களையும் செயல்படுத்தி வருவதை சுட்டிக் காட்டினார்.

Views: - 30

0

0