திமுகவினருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் புகார்

8 April 2021, 2:53 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே திமுகவினருக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை ஆய்வாளர், காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி சார்பில், அதிமுகவினர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கடந்த 6ம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதியில், அதிமுக சார்பில் பரஞ்சோதியும், திமுக சார்பில் கதிரவன் ஆகியோர் போட்டியிட்டனர். ஓட்டுப்பதிவு நாள் அன்று இனாம் சமயபுரம் பகுதியில் உள்ள குமரன் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுகவின் வாக்குச்சாவர முகவர்களாக அழகுராஜா, அங்கு, ராஜ், சிவா ஆகியோர் செயல்பட்டனர். அப்போது திமுகவை சேர்ந்த தெய்வசிகாமணி, அப்துல்லா, மருதுபாண்டியன், வேலுச்சாமி ஆகியோர், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத இருவரை அழைத்து வந்து ஓட்டு போட முயன்றனர். அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை கேட்ட போது வாய் தகராறு ஏற்பட்டு மருதுபாண்டியன், வேலுச்சாமி ஆகியோர் அதிமுக முகவர்களை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து, சமயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் ஆய்வாளர் முத்து அதிமுகவினரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அன்று மாலையே அதிமுகவினரின் வீடுகளுக்குச் சென்று ஜாதிப் பெயரைச் சொல்லியும், வழக்குப் பதிவு செய்து உள்ளே தள்ளி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளனர். எனவே, தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்தவர்களையே மிரட்டிய ஆய்வாளர் முத்து மற்றும் காவலர் சரவணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் சக்திவேலன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்னர்.

Views: - 33

0

0