தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய அதிமுகவினர்

11 November 2020, 10:04 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் 5000 பேருக்கு தீபாவளி பரிசாக பட்டாசுகள், இனிப்புகள் ரொக்கம் 500 மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் வழங்கினார்.

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் உதகையில் அதிமுக கட்சி சார்பில் மாவட்ட கழகம் முதல் கிளைக் கழகம் வரை உள்ள கட்சியின் தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது .உதகை குன்னூர் கூடலூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உடைய சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களுக்கு இந்த தீபாவளி பரிசு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கேஆர் அர்ஜுனன் உட்பட ஏராளமான கட்சியின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Views: - 14

0

0