கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற நபரை தாக்கிய கரடி…

3 August 2020, 9:06 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மாச்சம்பட்டு காப்புக்காட்டுப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்றவரை கரடி தாக்கிய சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்கிய

ஆம்பூர் அடுத்த கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (40). இவர் இன்று மதியம் மாச்சம்பட்டு காப்புக்காட்டுப்பகுதியில் தனக்கு சொந்தமான கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்றுள்ளார். அப்போது காப்புக்காட்டுப்பகுதியில் உள்ள ரெட்டிகிணறு என்னும் பகுதியில் நாராயணன் கால்நடைகளை குடிநீருக்கு அழைத்துச்சென்ற போது அப்பகுதியில் உள்ள பாறையின்இடுக்கில் குட்டிகளை ஈன்ற கரடி ஒன்று நாராயணனை கொடுரமாக தாக்கியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த நாராயணன் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கம் மேய்ச்சலில் ஈடுப்பட்டவர்கள் உடனடியாக இச்சம்பவம் குறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலர் மூர்த்தியிற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் நாராயணனை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வனத்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Views: - 6

0

0